Monday, January 24, 2022
Homeதமிழ் சினிமாசினிமாLOL என்ற நிகழ்ச்சி மூலம் நடிகர் விவேக் மீண்டும் நம்மை சந்திக்க வருகிறார்

LOL என்ற நிகழ்ச்சி மூலம் நடிகர் விவேக் மீண்டும் நம்மை சந்திக்க வருகிறார்

-

LOL என்ற நிகழ்ச்சி மூலம் சின்ன கலைவாணர் விவேக் நம்மை சந்திக்க வருகிறார்

LOL: எங்க சிரி பாப்போம், அமேசான் பிரைம் வீடியோவின் இந்தி நகைச்சுவை நிகழ்ச்சியான LOL: Hasse Toh Phase இன் தமிழ் பதிப்பாக வெளி வருகிறது.

இந்த நிகழ்ச்சி ஒரு எழுதப்படாத (Unscripted) நகைச்சுவை ரியாலிட்டி தொடர் ஆகஸ்ட் 27 அன்று அமேசான் பிரைமில் திரையிடப்படுகிறது. 

ஆறு எபிசோட் நிகழ்ச்சியாக வெளியிடப்படும் இந்த நிகழ்ச்சியாக வெளிவர இருக்கிறது.

இந்த நகைச்சுவை நகைச்சுவை நிகழ்ச்சியான LOL நோக்கமே அறையில் உள்ள மற்ற நபரை சிரிக்க வைப்பது.

அதில் மற்ற நபர்கள் சிரித்தால் அவர்கள் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்படுவார்கள். கடைசியாக நிலைத்து நிற்கும் அதாவது சிரிக்காமல் இருக்கும் நபருக்கு  25 லட்சம் ரொக்கப் பரிசை பரிசாக வழங்கப்படும்.

LOL: எங்க சிரி பாப்போம் நகைச்சுவை லெஜண்ட் விவேக் அவர்கள் நம்மிடையே இல்லையென்றாலும் அவரின் டிஜிட்டல் முகத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருப்பது நிதர்சனமான உண்மை.

பிரபல நகைச்சுவை நடிகர் சிவாவுடன் விவேக் அவர்களும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் என்று கூறப்படுகிறது. அந்த போஸ்டரிலும் அப்படிதான் தெரிகிறது.

இருப்பினும், அவரது அகால மரணத்திற்கு பிறகு இவர் டிஜிட்டல் நிகழ்ச்சியில் தோன்றின கடைசி நிகழ்ச்சியாக இருக்கும் என்ற பெருமையை பெற்றுள்ளது.

“LOL: எங்க சிரி பாப்போம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது, ஏனெனில் இது புகழ்பெற்ற நடிகர் மற்றும் எனக்கு பிடித்த என்டேர்டைன்மெண்ட் கிங் விவேக் சார் உடன் எனது கடைசி படப்பிடிப்பு. 

See also  Valimai next update is ready - வலிமை திரைப்படத்தின் அடுத்த அப்டேட் ரெடி
LOL என்ற நிகழ்ச்சி மூலம் சின்ன கலைவாணர் விவேக் நம்மை சந்திக்க வருகிறார்

அவரது பன்முகத்தன்மை என்னை பெரிதும் ஈர்த்தது, விவேக் சார் ஏற்கனவே காமெடியில் அசத்துவார்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை ஒரு சிறந்த பொழுதுபோக்காக மாற்றி இருப்பது ஒரு சிறப்பம்சம் 

அவருடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் எனக்கு அற்புதமான நேரம் கிடைத்தது, ”என்று சிவா கூறினார்.

LOL: எங்க சிரி பாப்போம் என்ற நிகழ்ச்சியில் மாயா எஸ் கிருஷ்ணன், அபிஷேக் குமார், பிரேம்ஜீ  அமரன், ஆரத்தி கணேஷ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், சதீஷ், குக் வித் கோமாளி புகழ், பவர்ஸ்டார் சீனிவாசன், பாகி (பார்கவ் ராமகிருஷ்ணன்) மற்றும் சியாமா ஹரிணி உட்பட பத்து நகைச்சுவை நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.

திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 17 அன்று விவேக் காலமானார். 

அவருக்கு வயது 59. LOL தவிர அவரது பிற படங்கள் மரணத்திற்குப் பின் வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில்  விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் சுந்தர் சி யின் அரண்மனை 3 ஆகிய திரைப்படங்கள் சின்ன கலைவாணர் விவேக் நடித்த திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர விருக்கிறது.

Related articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50FansLike
25FollowersFollow
6FollowersFollow
50SubscribersSubscribe

Latest posts