Monday, January 24, 2022
Homeதமிழ் சினிமாசினிமாAnnabelle Sethupathi - விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Annabelle Sethupathi – விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

-

Annabelle Sethupathi – விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு :

அனபெல்லா சேதுபதி (Annabelle Sethupathi) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, டாப்ஸி பொண்ணு நடிக்கும் இத்திரைப்படம் ஒரு திகில் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Annabelle Sethupathi - விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Annabelle Sethupathi – விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அனபெல்லா சேதுபதி படத்தின் முதல் போஸ்டரை இன்று தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியிட்டார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி பொண்ணு, யோகி பாபு, ராதிகா சரத்குமார் மற்றும் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

யார் இந்த தீபக் சுந்தர்ராஜன் – Annabelle Sethupathi

இந்த படத்தின் கதாநாயகியான டாப்ஸி பொண்ணு இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு தமிழ் திரும்பியுள்ளார். இந்த திரைப்படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார், இவர் யாரென்றால் பயணங்கள் முடிவதில்லை, திருமதி பழனிச்சாமி, மெல்ல திறந்தது கதவு, வைதேகி காத்திருந்தால் போன்ற எண்ணற்ற சூப்பர் டூப்பர் படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான சுந்தர்ராஜன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : விஜய் சேதுபதியின் லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

See also  Sushant Singh Rajput - இறந்தவரின் திரைப்படத்திற்கு தேசிய விருது

அனபெல்லா சேதுபதி வருகிற செப்டம்பர் மாதம் 17 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் ஆகிய மொழிகளில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹோஸ்டாரில் வெளியிடப்படும் என்று அந்த ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் திரைப்படங்கள் நிறைய உள்ளன, மேலும் வருகிற செப்டம்பரில் மட்டும் பல படங்கள் வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசிப் படமான லாபம் திரைப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50FansLike
25FollowersFollow
6FollowersFollow
50SubscribersSubscribe

Latest posts