Saturday, October 16, 2021

Bala and Suriya – நடிகர் சூர்யாவும் இயக்குனர் பாலாவும் மீண்டும் இணைகிறார்கள்.

Must Read

Bala and Suriya – நடிகர் சூர்யாவும் இயக்குனர் பாலாவும் மீண்டும் இணைகிறார்கள்:

இயக்குனர் பாலா கடைசியாக இயக்கிய வர்மா படம் பல்வேறு தடைகளால் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை, மாறாக OTT யில் வெளியானது, ஆனால் அந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளனதால் வெற்றி பெற முடியவில்லை.

Bala and Suriya
Bala and Suriya

படங்கள் தோல்வி – Bala and Suriya

இயக்குனர் பாலா இயக்கி கடைசியாக வந்த திரைப்படம் நாச்சியார், இதில், நடிகை ஜோதிகா மற்றும் G.V பிரகாஷ் குமார் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர். இந்த திரைப்படமும் போதிய வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் பாலா அவர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பை கடந்த மாதங்களில் அறிவித்திருந்தார், அதில் அதர்வா முரளி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் பாலா இந்த திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவை அணுகியபோது, சூரியாவிற்கு அந்த கதை பிடித்ததால் அவரே இந்த படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார்.

ஆகவே பாலாவும், சூரியாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.

இவ்விருவரும் சேர்ந்து நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் மூன்றாவது முறையாக இணையும் இந்த கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவது உறுதி, மேலும் இயக்குனர் பாலவிற்கு கடைசியாக இயக்கிய படங்கள் கை கொடுக்கவில்லை ஆகவே அவர் நிச்சயமாக வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா தற்போது சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திலும், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் ஜெய் பீம் படத்திலும் நடித்து வருகிறார். அதன் பிறகு பாலா இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

See also  Pudupettai famous Actor Nithish Veera died ! - புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்தவர் காலமானார்!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -