Wednesday, December 1, 2021

Bharathi Kannamma – பாரதி கண்ணம்மா சீரியலிருந்து நடிகை ரோஷினி விலகல்

Bharathi Kannamma – பாரதி கண்ணம்மா சீரியலிருந்து நடிகை ரோஷினி விலகல், பாரதி கண்ணம்மாவுக்கு பதில் யார் பாரதி கண்ணம்மா சீரியல் நடிப்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருவது குறுப்பிடத்தக்கது. இந்த தொடருக்கென்று ஒரு ரசிகர்  பட்டாளமே இருப்பது குறுப்பிடத்தக்கது.

அந்தவகையில் பாரதி மற்றும்  கண்ணம்மா என்று இரு கதாபாத்திரங்களை மையாமாகக் கொண்டும்,  அவர்களுக்கிடையே நடக்கக்கூடிய குடும்பத்தைப் பற்றிய கதையாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்த சீரியலில் முதன்மை  கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி அவர்கள் திடீரென்று பாரதி கண்ணம்மா இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களாக பாரதிகண்ணம்மா (Bharathi Kannamma) முடிய உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி இருந்தது, அதை உறுதிப்படுத்தும் நிலையில் கதையும்  அப்படித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இரு பிள்ளைகளின் தகப்பன் பாரதி தான் என்று கதை நகர்கிறது, கதை முடியும் தருவாயில், திடீரென்று கதையின் நாயகி மாற்றப்பட்டிருப்பது இல்லத்தரசிகள் இடையே பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நடிகை ரோஷினியை இனி பார்க்கவே முடியாது என்று ரசிகர்கள் ஏங்கி உள்ளார்கள்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது இந்த தொடரில் மூலமாக விஜய் டிவிக்கு நல்ல டிஆர்பியை ரேட்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

See also  LOL என்ற நிகழ்ச்சி மூலம் நடிகர் விவேக் மீண்டும் நம்மை சந்திக்க வருகிறார்

பாரதிகண்ணம்மா சீரியல் 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் பாரதியும் கண்ணம்மாவும் எப்போது சேருவார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்த வேளையில் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

நட்சத்திரா மீண்டும் – Bharathi Kannamma

நடிகை ரோஷினி விலகியதை அடுத்து அதற்கான காரணம் வெளியாகி உள்ளது, அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கண்ணமா கதாபாத்திர்க்கு அடுத்து யார் அவருடைய இடத்தை நிரப்புவார்கள் என்று கிசு கிசுத்த நிலையில், ஜி தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த நட்சத்திரா தேர்வு செய்துள்ளதாகவும் அவர் தொடர்ந்து பாரதிகண்ணம்மா வில் கண்ணம்மாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஏற்கனவே நாம் அறிந்தபடி ஜீ தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலாவாக நடித்தது குறுப்பிடத்தக்கது.

நட்சத்திராவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்று கூறலாம், அது மட்டும் இல்லாமல் யாரடி நீ மோகினி சீரியல் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்றே கூறலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கண்ணம்மாவின் கதாபாத்திரத்திற்கு உதவுவாரா என்று?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -