Wednesday, December 1, 2021

Devar Magan 2 – விக்ரம்-விஜய் சேதுபதி தேவர்மகன் 2இல் இணைகிறார்கள்

Devar Magan 2 – விக்ரம்-விஜய் சேதுபதி தேவர்மகன் 2இல் இணைகிறார்கள்: விக்ரம்-விஜய் சேதுபதி இணையும் பிரம்மாண்ட படம்…தேவர்மகன் 2 ஆம் பகாமா?

நடிகர் விஜய்சேதுபதி ஏற்கனவே பல மொழிகளிலும் ஒரு டஜனுக்கும் அதிகமான படங்களில் இணைந்து நடித்து வருகிறார்.

விக்ரம்,விஜய்சேதுபதி இருவரும் ஒரு மேடையில் இணைந்து படம் நடிக்க போவதாக கூறியிருந்தனர்.

விக்ரமும், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளர்.

விக்ரம் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் தமிழ் திரைஉலகில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல மொழிகளிலும் பிரபலமான நடிகர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து பிரம்மாண்ட திரைப்படத்தில் ஒன்றில் நடிக்கபோவதாக ஏற்கனவே கூறப்பட்டது.

Devar Magan 2

பேச்சிவார்த்தை துவக்கிய டைரக்டர் – Devar Magan 2

விக்ரம் மற்றும் விஜய்சேதுபதிடம் பிரபல மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் தான் இயக்க போகும் தமிழ் திரைப்படத்தில் லீட் ரோலில் நடிக்க வைக்க இவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளாராம்.

ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறதாம்.இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாம்.

பிரபல மலையாள திரையுலகின் டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் இருக்கும் இந்த படம் தேவர்மகன் 2 ஆம் பாகமாக இருக்குமோ என்று உறுதியாக தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் உலக நாயகன் கமல் நடிப்பாரா என்ற தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இது தேவர்மகன் இரண்டாம் பகாமாக இல்லாமல் ஒரு புதிய கதையாக இருக்கும் என்றும் நமபத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

See also  Vikram - விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு 3 ஜோடியா?

Devar Magan

கமல்ஹாசன் மீண்டும்

இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தில் கமலஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து முடித்ததும் புதிய நடிக்க போவதாக கமல் ஏற்கனவே உறுதி செய்து விட்டார்.

இதில் புதிய தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை உலகநாயகனே எழுதி வருவதாகவும், இதில் விஜய் சேதுபதி மற்றும் விக்ரம் இனைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Editor : Thamizh

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -