Wednesday, December 1, 2021

Dr Manmohan Singh latest hospital update

டாக்டர் மன்மோகன் சிங் உடல்நிலை லேட்டஸ்ட் தகவல்: Dr Manmohan Singh latest hospital update:

தற்போது ராகுல் காந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின்மன்மோகன் சிங்கின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

நம் நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சலால் அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வயது 89.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திராகுல் காந்தி வியாழக்கிழமையான இன்று, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை – Dr Manmohan Singh மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிததார்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து அறிந்து அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.

மன்மோகன் சிங், காய்ச்சல் காரணமாக தொடர்ந்து உடல் பலவீனம் ஏற்பட்டதால், புதன்கிழமையான நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறுகையில், “மனோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் முன்னாள் பிரதமருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் காங்கிரஸ் தலைவர் கலந்துரையாடியதாகவும், அவரது உடல்நிலை குறித்த சமீபத்திய தகவலைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் மன்மகன்சிங்கின் மனைவியையுமான குர்ஷரன் கவுரை அவர்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றபோது சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக, ஒரு எய்ம்ஸ் மருத்துவர் மன்மோகன்சிங் புதன்கிழமை எய்ம்ஸ் கார்டியோ-நியூரோ மையத்தின் தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார் என்றும் டாக்டர் நிதிஷ் நாயக் தலைமையிலான இருதயநோய் நிபுணர்கள் குழுவின் கவனிப்பில் இருப்பதாகவும் கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது, டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது நினைவில் இருக்கும்.

தலைவர்கள்

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டாக்டர் மன்மோகன்சிங் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

See also  திசையன்விளை மற்றும் வள்ளியூரில் கோவிட் -19 சிகிச்சை மையங்கள் துவக்கம்

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -