Saturday, October 16, 2021

செட்டிநாட்டு மீன் கொழம்பு செய்வது எப்படி ?

Must Read

செட்டிநாட்டு மீன் கொழம்பு செய்வது எப்படி ? அதற்கு தேவையான பொருட்கள் :

மீன் – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 250 கிராம் + 5-8 (அரைப்பதற்கு)
தக்காளி – 5 Nos
புளி – பெரிய எலுமிச்சை சைஸ் (கரைசல்)
கடுகு உளுத்தம்பருப்பு – தேவையான அளவு
வெந்தயம் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
தனியா தூள் – 100 கிராம்
மிளகாய்தூள் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 4 Nos
பெருங்காயம் – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் – 1/2 முடி

செட்டிநாட்டு மீன் கொழம்பு செய்வது எப்படி ?

அறைக்கப்படும் பொருள்:

தேங்காய் 1/2 முடியுடன், சிறிது சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்

செய்முறை :


முதலில் வானலை வைத்து நல்ல எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.

சிவந்தவுடன், கருவேப்பிலை போடவும்.

பின்பு பொடிசாக வெட்டி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் மற்றும் 4 பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் சிவந்தவுடன், பின்பு வெட்டி வைத்திருக்கும் தக்காளியை போடவும்.

தக்காளி வதங்கியுடன், தனியாத்தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

கொஞ்சம் கொதி வந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய், சின்ன வெங்காயத்தை போட்டு கொதிக்க விடவும்.

See also  அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : Tamilnadu Post office

10 நிமிடம் கழித்து மீன் துண்டுகளை போடவும்.

மீன் போட்டு நன்றாக கொதிக்க விடவும். ஒரு 7-10 நிமிடம் வரை கொதிக்க விட்டு, பின் கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.

சுவையான ஹோட்டல் ஸ்டைல் செட்டிநாட்டு மீன் கொழம்பு ரெடி.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -