Saturday, October 16, 2021

Friendship Movie – Watch Friendship movie in Theaters

Must Read

Friendship Movie – Watch Friendship movie in Theaters: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படம் “Friendship” இன்று வெளியிடப்படுகிறது. ஜான் பால் ராஜ் இயக்கத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பிக் பாஸ் சீசன் 3 நட்சத்திரம் லாஸ்லியா மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆனது.

Friendship Movie - Watch Friendship movie in Theaters
Friendship Movie – Watch Friendship movie in Theaters

சில மாதங்களுக்கு முன்பு ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது, அர்ஜுன் படத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கு  பெரும் எதிர்பார்ப்பு  அதிகமாக காணப்பட்டது. 

அதுமட்டுமில்லாமல் லாக் ரிலீஸ் செய்ததில் இருந்து ஒரு சில படங்களை தியேட்டரில் ரிலீஸ் ஆகிய நிலையில் பிரண்ட்ஷிப் தியேட்டரில் வெளியாகும்  என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  இந்த திரைப்படம் லாசிலியாவுக்கு முதல் படம்  என்பது குறிப்பிடத்தக்கது.

லாஸ்லியா  தியேட்டருக்கு நேரில் சென்று ரசிகர் ரசிகர்களோடு இந்த திரைப்படத்தை கண்டு களித்தார்,  அதில் பார்வையாளர்களின் மகிழ்ச்சியை நேரில் கண்டு வியந்தார்.

படத்தின் முதல் பாதி  விறுவிறுப்பாகவும், வேடிக்கையாகவும்  நோக்கி நகர்கிறது, ஆனால்  முதல் பாதியின் படத்தை ஒப்பிடும்போது பிந்தைய பாதி  படம் சற்று  மெதுவாக நகர்கிறது. 

இந்த திரைப்படம் ஒரு ஆண் பெண் நட்பின் உண்மையான அர்த்தத்தை இந்த படம் உணர்த்துவதாக இருக்கிறது மேலும் இந்த திரைப்படம்  குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க கூடிய படமாக வெளிவந்திருக்கிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான நட்பை சமூகம் எவ்வாறு பார்க்கிறது என்பது படத்தின்  முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். 

See also  Valimai next update is ready - வலிமை திரைப்படத்தின் அடுத்த அப்டேட் ரெடி

இந்த திரைப்படம் நிறைய ஆண் பெண் நண்பர்களுக்கு ஒரு சிறந்த நட்பு படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

படம் முழுக்க முழுக்க விளையாட்டைப் பற்றியது அல்ல; இது  மிகச்சிறந்த  நட்பினை பற்றியது.  இந்த திரைப்படத்தில் கிரிக்கெட்  அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்  நடித்திருப்பது,

கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல்,  அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

ஹர்பஜன் சிங் ஏற்கனவே டிக்கிலோனா திரைப்படத்தில் ஒரு ஆக்கி டீமின் கோச்சாக வந்து இருப்பார்,  அதன்படி இது அவருக்கு இரண்டாவது திரைப்படம்.

லோஸ்லியா மரியநேசன் தனது நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜான் பால் ராஜ் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்திற்கு D.M. உதயகுமார் இசையமைத்துள்ளார்.  

மேலும் இந்த திரைப்படத்தில் ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் மற்றும் நகைச்சுவை நடிகர் சதிஷ் மற்றும் குக் வித் கோமாளி புகழ் பாலா அவர்கள் நடித்துள்ளது கூடுதல் சிறப்பு.

இதற்கிடையில் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்து ட்விட்டர் போட்டுகொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -