Wednesday, December 1, 2021

Happy birthday Nayanthara ரொமாண்டிக்காக விக்னேஷ் சிவனுடன் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ

Happy birthday Nayanthara – பிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன்தாரா | ரொமாண்டிக்காக விக்னேஷ் சிவனுடன் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத ஹீரோயினாக வளவருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று பிறந்தநாள் காண்கிறார்.

கடந்த சில வருடங்களைப் போலவே, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார்.

சமீபத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கேக் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன் என்று எழுதிய பெரிய கேக்கை விக்னேஷ் சிவனுடன் கேக் வெட்டினார். இந்த வீடியோவில் ஒருவரையொருவர் மார்போடு அணைத்து அன்பை பகிர்ந்து கொண்ட பின் கேக் வெட்டப்பட்டது (Happy birthday Nayanthara) .

வீடியோவின் இறுதியில் நயன்தாரா கேக் வெட்டுகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நயன்தாரா தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிச்சயதார்தத்தை உறுதி செய்தார் – Happy birthday Nayanthara

கடந்த மாதங்களில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பங்குபெற்ற நயன்தாரா, விரலில் உள்ள மோதிரத்தை பற்றிய கேள்வியை எழுப்புகையில், அதற்க்கு நயன்தாரா இது எங்கள் இருவரின் நிச்சயதார்த்த மோதிரம் என்று நயன்தாரா சிரிப்புடன் கூறியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. விக்னேஷிடம் சிவனுக்கு எது பிடிக்கும் என்று கேட்டதற்கு, விருப்பு வெறுப்பு எல்லாம் இருக்கிறது என்று ஓப்பனாக பதிலளித்தார்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை எனினும், அவர்கள் சூட்டிங் மற்றும் வெளியில் சுற்றுவது என்று எதுவாக இருந்தாலும் ஒன்றாகவே செல்கிறார்கள்.

இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் சமீபத்தில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் சேர்ந்து தமிழில் காத்து வாக்கல இரண்டு காதல் படத்தில் நடிகை நயன்தாரா நடித்துவருகிறார்.

இதற்க்கு மேலாக நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் படத்தில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

See also  வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் இல்லை - Vadivelu Comedy

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -