Saturday, October 16, 2021

HBD Sunil Chhetri: கால்பந்து விளையாட தகுதியில்லாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர், இன்று உலகளவில் அதிக கோல் அடித்தவர் பட்டியலில் 3 வது இடம்

Must Read

HBD Sunil Chhetri: கால்பந்து விளையாட தகுதியில்லாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர், இன்று உலகளவில் அதிக கோல் அடித்தவர் பட்டியலில் 3 வது இடம்:

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் 37 வது பிறந்தநாள் இன்று கொண்டாடுகிறார்.

ஒரு காலத்தில் பயிற்சியாளரால் கால்பந்து விளையாட தகுதியில்லாதவர் என்று ஒதுக்கி வைத்தவர் இன்று ரொனால்டோ, மெஸ்ஸி அவர்களுக்கு அடுத்த படியாக அதிக கோல் அடித்தவர் பட்டியலில் உயர்ந்தவரின் பிறந்தநாள்.

தற்போதைய கால்பந்து வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி மற்றும் அலி எம்ப்கவுட் ஆகியோருக்குப் பிறகு சர்வதேச அளவில் அதிக கோல் அடித்தவர் சேத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் பிறந்தநாள் இன்று. தெலங்கானாவில் ஆகஸ்ட் 3, 1984 இல் பிறந்த சுனில் சேத்ரி இன்று 37 வயதை எட்டியுள்ளார்.

சுனில் சேத்ரி அவரது வாழ்க்கையில் பல மைல்கற்களை எட்டியுள்ளார். அவர் இந்தியாவிற்காக அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையும் பெற்றவர்.

2007 ல் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அளவில் அறிமுகமான சுனில் சேத்ரி, தனது வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டார்.

இன்று, சுனில் சேத்ரி இந்திய கால்பந்தின் நட்சத்திரமாக இருந்தாலும், அணியின் பயிற்சியாளரால் அவர் தோல்வியடைந்த வீரர் என்று அழைக்கப்பட்ட காலமும் இருந்தது.

தெரிந்து கொள்ளுங்கள் : YO WhatsApp என்றால் என்ன? அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன?

தெரிந்து கொள்ளுங்கள் : Telegram மாதிரியே ஆப் இருக்கா?

See also  72 வயது மூதாட்டி முதல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து....Tamilnadu News

அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இந்திய கால்பந்தில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் என்றால் அவரது திறமை, பொறுமை, அயராது உழைப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி சுனில் சேத்ரிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

HBD Sunil Chhetri: கால்பந்து விளையாட தகுதியில்லாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர், இன்று உலகளவில் அதிக கோல் அடித்தவர் பட்டியலில் 3 வது இடம்
HBD Sunil Chhetri: கால்பந்து விளையாட தகுதியில்லாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர், இன்று உலகளவில் அதிக கோல் அடித்தவர் பட்டியலில் 3 வது இடம் : Photo Credit: PTI

அதில் உங்கள் வாழ்க்கையின் மற்ற எல்லா நாட்களையும் போலவே உங்களுக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இன்று அமையும் என்று நம்புகிறேன் மற்றும் நான் எப்போதும் உங்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் இயல்பாகவும் நம்பிக்கைக்கு உதாரணமாக இருக்கக்கூடிய நம்முடைய நட்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாம் இருவரும் சேர்ந்து டெல்லி தெரு உணவுகளை சாப்பிட்டா அந்த நினைவுகளை நான் நினைத்து பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Sunil Chhetri International Goals :

சுனில் சேத்ரி நமது நாட்டிற்காக மொத்தம் 74 கோல்களை அடித்துள்ளார். இந்தியாவிற்காக அதிக கோல் அடித்தவர் வீரர் அவர்.

Sunil Chhetri net worth :

சுனில் சேத்ரியின் தற்போதைய நிலவரப்படி நிகர மதிப்பு $ 1 மில்லியன் ஆகும்.

See also  டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற விளையாட்டு வீரர்களின் நிகர மதிப்புடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -