Wednesday, December 1, 2021

International Day of Peace 2021

International Day of Peace 2021 : சர்வதேச அமைதி தினம்: உலக அமைதி தினம் இன்று, உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய குறிக்கோள் உலகம் முழுவதும் அமைதியை நிலைநிறுத்துவதாகும். யுனைடெட் நேஷன்ஸ் சாசனம் போரைத் தடுக்கும் மற்றும் உலக நாடுகளுக்கிடையே அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தைப் பற்றியும் நீண்ட காலமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

International Day of Peace 2021

உலக அமைதி தினம் (சர்வதேச அமைதி தினம்) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச அமைதி தினம் முக்கியமாக உலகம் முழுவதும் அமைதியையும் அகிம்சையையும் நிலைநாட்டும் வகையில் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச அமைதி நாள் 2021 தீம் : International Day of Peace theme :

ஒவ்வொரு ஆண்டையும் போலவே, இந்த ஆண்டின் உலக அமைதி நாள் 2021 இன் கருப்பொருள் “ஒரு சமமான மற்றும் நிலையான உலகிற்கு சிறந்ததை மீட்டெடுப்பது” ஆகும்.

International Day of Peace History :

இந்த நாள் 1982 இல் தொடங்கி இன்றுவரை மிகப்பெரிய நோக்கத்துடன் சர்வேதேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில், செப்டம்பர் 21 அன்று கொண்டாடப்பட வேண்டும் என்று ஐநா மீண்டும் அறிவித்தது. இந்த நாளில் சமாதானத்தின் செய்தி திறந்த வானில் பறக்கும் வெள்ளை புறாக்களால் என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெற்றது.

இப்போது உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டினரும் தங்களது உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம் என்று நாட்டில் சமாதானமில்லாமல் வன்முறை, தீவிரவாதம் என்று அவ்வப்போது நடந்து கொண்டுதான் வருகிறது.

See also  Actor Sivakarthikeyan Donate 25 Lakh - நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம்

இந்த நிலை மார வேண்டுமானால் முதலில் ஒவ்வொரு தனிமனிதனும் மாற வேண்டும், அப்படி மாறினால் ஒரு சமுதாயம் மாறும், ஒரு நாடு மாறும், பின்பு உலகமே மாறும்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், சிவில் சமூகம் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் அமைதி தினத்தையொட்டி பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தி வருகின்றனர். உலக அமைதி தினத்தையொட்டி, வெள்ளை நிற புறாக்கள் இந்தியாவில் எங்கும் பறக்க விடப்பட்டு அமைதியை குறிக்கும் வகையில் இந்த நாள் அனுசிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -