Wednesday, December 1, 2021

Jai Bhim – வருத்தம் தெரிவித்தார் ஜெய் பீம் பட இயக்குனர்

Jai Bhim – வருத்தம் தெரிவித்தார் ஜெய் பீம் பட இயக்குனர்…

நாடு முழுவதும் கடந்த மாதங்களில் வெளியான  டி. ஜே ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம்.

ஜெய் பீம் திரைப்படம் ஆரம்பத்திலிருந்து சர்ச்சையில் வெற்றி நடை போட்டு வந்த நிலையில் ஒரு சமூகத்தினரையும் மாத்திம் இழிவுபடுத்தி விட்டதாக அச் சமூகத்தினர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

ஒரு சில பேர் மிரட்டியும் வந்த செய்திகளில் வெளியானது, மேலும் இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த படத்தில் கட்டப்பட்ட,

காலண்டர் எங்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நடிகர் சூர்யா அவர்களுக்கு ஒன்பது கேள்விகளும் கேட்டு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த கடிதத்துக்கு நடிகர் சூர்யா அவர்கள் பதிலும் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சமூகத்தினரிடையே மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் பல தரப்பிலிருந்து நடிகர் சூர்யாவிற்கு ஆதரவும் திரண்டு வந்தது.

பல நடிகர், நடிகைகள் நடிகர் சூர்யா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில்,

வன்னியர் சமூகத்தைச் சார்ந்த சிலர் நடிகர் சூர்யா அவர்களை எட்டி உதைதால் ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்று பத்திரிக்கைகளில் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

அதன் பெயரில் நடிகர் சூர்யா அவர்களின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளித்திருந்தனர்.

தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு அளித்து இருந்த நிலையில் இயக்குனர் திரு பாரதிராஜா அவர்களும், ஆதரவு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

See also  Mahaan - விக்ரம் மற்றும் துருவ் நடிக்க 'சியான் 60' மகான் போஸ்டர் ரீல்

நஷ்ட ஈடு – Jai bhim

பாமக வழக்கறிஞர் திரு பாலு அவர்கள் கட்சியின் சார்பாக நஷ்டஈடு 5 கோடி கேட்டு நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழக்கு ஒன்றை பதிவு பதிவிட்டும், வரும் நஷ்ட ஈடு பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும் என்றும் அறிக்கையிட்டனர்.

தொடர்ந்து இந்த இந்தத் திரைப்படத்தின் விவகாரம் பூதாகரமாக வெடித்தது, இந்த நிலையில் பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்தார், ஆனால் ஒரு சில காட்சிகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வருத்தம் தெரிவித்தார்

இன்று இந்த படத்தின் இயக்குனர் டி. ஜே ஞானவேல் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் அந்தக் காலகட்டத்தில் நடந்த சம்பவம் என்பதால் இந்த காட்சியை எடுக்கப்பட்டதாகவும், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் இதை இந்த காட்சி எடுக்கப்பட படவில்லை என்றும் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழ் நிலம் உண்மையான படைப்பையும் உண்மையான உழைப்பையும் போற்றுவதில் தவறவில்லை என்றும் தனது நன்றியை தமிழக மக்களுக்கு தெரிவித்து இருந்தார்.

முன்னதாக நடிகர் சூர்யா இந்தக்கதையின் உண்மையின் நாயகியாக பார்வதி அம்மாளுக்கு 15 லட்சம் வைப்பு நிதியாக அவர் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -