Monday, January 24, 2022
Homeஇந்தியாMallikarjun Kharge மேகாலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் TMC ல் இணைந்தது ஒரு சதி

Mallikarjun Kharge மேகாலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் TMC ல் இணைந்தது ஒரு சதி

-

Mallikarjun Kharge மேகாலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் TMC ல் இணைந்தது ஒரு சதி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குற்றச்சாட்டு.. 

மேகாலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தது ஒரு சதி போல் நடக்கிறது என்று கார்கே கூறினார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கார்கே – Mallikarjun Kharge, இது ஒரு சதி போல நடக்கிறது. இதை எங்கள் கட்சியினர் குறிப்பாக எங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் உயர்மட்ட தலைவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் முடிவு செய்வார்கள்.

மேகாலயாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேரில் 12 பேர் திரிணாமுல் காங்கிரஸில் கடந்த வியாழக்கிழமை அன்று அக்கட்சியில் இணைந்தனர்.

வடகிழக்கு மாநிலத்தின் மிக பழமையான கட்சியான இருக்கக்கூடிய காங்கிரஸ் பெரும் பின்னடைவை இதன் மூலம் சந்தித்துள்ளது. 

இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், ராகுல் காந்தி மற்றும் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் இது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.

மேலும் இது ஒரு சதி போல நடந்திருக்கிறது என்றும்,. இதை எங்கள் கட்சியினர், குறிப்பாக எங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி,

ராகுல் காந்தி மற்றும் உயர்மட்ட தலைவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் ஒரு நல்ல முடிவெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே சமயம், ‘நாங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும், சித்தாந்தமாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் பாஜகவை தோற்கடித்து, அவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராகப் போராடுவோம் என்று கூற விரும்புகிறேன். 

See also  Sonia Agarwal - நடிகை சோனியா அகர்வால் கைது

முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தாக்கு – Mallikarjun Kharge

இதற்கிடையில், முன்னதாக டிஎம்சியில் (TMC) இணைந்த மேகாலயா முன்னாள் முதல்வர் முகுல் சங்மா, நாட்டிற்கு அகில இந்திய எதிர்க்கட்சி தேவை என்றும், அதை நிறைவேற்ற காங்கிரஸ் தவறிவிட்டது என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசுடன் நாங்கள் இணைவதற்கு சரியான முடிவை எடுத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தது குறித்து சங்மா மேலும் கூறுகையில், நாட்டில் ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக கடமையாற்றுவதற்கான அழைப்புக்கு காங்கிரஸ் கட்சி உண்மையில் பதிலளிக்கத் தவறிவிட்டது.

எனவே மாநிலம், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் நாட்டைக் கவனிப்பதற்கு சாத்தியமான மாற்று வழியைக் கண்டறியும் எங்களின் பயிற்சி முடிவுக்கு வந்தது. அது திரிணாமுல் காங்கிரஸ் தான் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேகாலயாவில் மொத்தம் இருந்த 17 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், தற்போது 12 எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளது அக்கட்சியில் சலசலப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

Related articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50FansLike
25FollowersFollow
6FollowersFollow
50SubscribersSubscribe

Latest posts