Monday, January 24, 2022
Homeதமிழ் சினிமாசினிமாKaathuvaakula Rendu Kaadhal - விரைவில் திரையரங்குகளில்

Kaathuvaakula Rendu Kaadhal – விரைவில் திரையரங்குகளில்

-

Kaathuvaakula Rendu Kaadhal – விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மூவரின் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் நான்காவது திரைப்படமான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ விரைவில் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

நடிகை சமந்தா சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, ​​லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இப்போது படப்பிடிப்பில் சேர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியாக ஒரு டஜன் திரைப்படம் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியில் அமிர்கானுடன் லால் சிங்க் சதா, தமிழில் உலக நாயகன் கமலஹாசனுடன் விக்ரம், வெற்றிமாறனின் விடுதலை,

மற்றும் புது முக இயக்குனரின் துக்ளக் தர்பார் படங்கள் அடங்கும். முக்கியமாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க இருக்கிறார்,

மேலும் இந்த படத்திற்கு VJ46 பெயரிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

Kaathuvaakula-Rendu-Kaadhal

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் படம், அதன் முன்னணி நடிகர்களுக்கிடையே முக்கோண காதல் கதை என்ற கோணத்தில்  நகரும் ஒரு காதல்  மற்றும் நகைச்சுவையாக  கதை நகரும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://youtu.be/RIc-U0IfTpk

மேலும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக நடிகை நயன்தாரா சமீபத்தில் புதுச்சேரியில்  படக்குழுவினருடன் சேர்ந்தார், நயன்தாரா தனது காருக்குள் நுழைந்து தனது ரசிகர்களை நோக்கி கைகளை அசைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது. 

See also  Shanthanu - மீண்டும் தொடங்கியது ராவண கோட்டம் ஷூட்டிங்

இதையும் படியுங்கள் : Plan Panni Pannanum movie

சமீபத்தில் நடிகை நயன்தாரா நடித்து வெளிவந்த  நெற்றிக்கண் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் உடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவால் தயாரிக்கப்படும் இந்த படம் அக்டோபரில் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு  சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா மற்றும் நயன்தாரா இருவருடனும் விஜய் சேதுபதி ஏற்கனவே பணிபுரிந்திருந்தாலும், இரண்டு நடிகைகளும்  ஒரே திரைப்படத்தில் நடிக்க இருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும்  இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். Kaathuvaakula Rendu Kaadhal

https://www.youtube.com/watch?v=YlymYnShOLw

Related articles

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50FansLike
25FollowersFollow
6FollowersFollow
50SubscribersSubscribe

Latest posts