Monday, January 24, 2022
Homeஇந்தியாOmicron What are the symptoms and How do you test?

Omicron What are the symptoms and How do you test?

-

Omicron: உலகம் முழுவதும் பயத்தை பரப்பும் ஓமிக்ரானின் புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள் என்ன? நீங்கள் எப்படி சோதிக்க வேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு ஓமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கவலைகளையுரைச் செய்துள்ளது. அதற்க்கு காரணம் இப்போதுதான் மெல்ல மெல்ல கொரோனாவின் தாக்கம் குறைவதுபோல் தெரிந்ததே அதற்க்கு காரணம்.

தென்னாப்பிரிக்காவில் காணப்படும் இந்த புதிய வகை ஓமிக்ரான் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த, உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் முன்கூட்டியே அதை தடுப்பதற்கு திட்டமிடத் தொடங்கியுள்ளன.

இந்த புதிய ஓமிக்ரான் வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளிடம் எச்சரிக்கையாக இருந்து வருகின்றன.

தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் Omicron வகை வைரஸ் அறிகுறியில்லாமலும் வரும் என்பது அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.

Omicron அறிகுறிகள் என்ன?

தென்னாப்பிரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகபிள் டிசீசஸ் (என்ஐசிடி) படி, ஒரு நபர் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு வேறுபட்ட அறிகுறிகள் இல்லை என்பதுதான் ஆச்சரியம். இதன் அறிகுறிகள் இல்லை என்பது ஒரு பக்கம் இருப்பதாக வைத்துக்கொண்டால் மற்றோரு பக்கம் இதன் விளைவு மிக பயங்கரமாக இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

அதேவகையில் அதன் அறிகுறிகளில் சில இங்கு பார்ப்போம்..

அவை தசை வலி, சோர்வு அல்லது இரண்டு நாட்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். இதுவரை யாராலும் இந்த Omicron வைரஸ்க்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்பது மீண்டும் கொரோனாவிற்கு மக்கள் பலி ஆன பிறகுதான் அதற்கான தீர்வு கிடைக்குமோ என்னவோ?

See also  Tamilnadu Governor - ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

மேலும் இந்த நோயை பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான இருமல் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு சிலர் அவர்களது வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவான அறிகுறிகள்

  • காய்ச்சல் (லேசான / மிதமான)
  • அதிக உடல் சோர்வு
  • தசைகள் வலி
  • தொண்டை கரகரப்பு
  • வறட்டு இருமல்

சோதனை எவ்வாறு செய்யப்படுகிறது?

What is the new coronavirus variant called? : Omicron சோதனை குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், SARS-CoV-2 இன் PCR சோதனை தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பல நாடுகளும் புதிய Omicron பின்னணியில் விழிப்புடன் இருப்பதாக தெரிவித்து வருகின்றன.

ஓமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி நவம்பர் 24 அன்று தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டார்.

உலகெங்கிலும் உள்ள நாடுகள் Omicron பரவுவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன. தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கும் பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50FansLike
25FollowersFollow
6FollowersFollow
50SubscribersSubscribe

Latest posts