Wednesday, December 1, 2021

Pakistan vs Bangladesh தொடரைக் கைப்பற்றியது

Pakistan vs Bangladesh தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி:

BAN vs PAK: கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது, இதன் மூலம் வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது.

வங்கதேசம் vs பாகிஸ்தான் ஆடியே 3-வது மற்றும் கடைசி t20 போட்டியின் இறுதியில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 3 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவர் கடைசி பந்து வரை விருவிருப்பான ஆட்டத்தில் அந்த அணியின் நவாஸ் அடித்த கடைசி பந்து 4 ரன்கள் அடித்த நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா ஸ்டேடியத்தில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில், பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

எனவே பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என தொடரை கைப்பற்றியது.

முன்னதாக வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது, 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

Pakistan vs Bangladesh – 2nd Innings

இரண்டாவது இன்னிங்சை பாகிஸ்தான் அணி தொடங்கியது, ஆரம்பம் முதல் நிதானமாக ஆடி வந்த பாகிஸ்தான் அணி கடைசி மூன்று பந்துகளில், 8 ரன்கள் தேவைப்பட்டது.

பின்னர் இப்திகார் அகமது ஒரு சிக்ஸர் அடித்தார், ஆனால் அவர் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து முதல் போட்டியின் நாயகன் முகமது நவாஸ் கடைசி ஓவரின் கடைசி பந்தில், பவுண்டரி அடித்து தனது அணியை வெற்றிபெற செய்தார்.

பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் பாபர் அசாம் 25 பந்துகளில் 19 ரன்களும், தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அவருடன் இணைந்து 43 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தனர்.

See also  Tokyo 2020 : பி.வி. சிந்து தனது 2 வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றார், பிரதமர் மோடி பெருமிதம்

மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஹைதர் அலி 38 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அவர் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

மறுபுறம், முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது 12 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து முகமதுல்லாஹ் பந்தில் அவுட்டானார்.

இப்திகரும் ஒரு சிக்ஸரின் உதவியுடன் 6 ரன்கள் எடுத்தார். அதே சமயம் முகமது நவாஸ், குஷ்தில் ஷா ஆகியோர் கடைசியில் ஆட்டமிழக்காமல் பாகிஸ்தான் அணியை வெற்ற பெற செய்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக வாசிம் மற்றும் காதிர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர், தானி மற்றும் ராஃப் தாலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -