Saturday, October 16, 2021

PBKS VS KKR – கே எல் ராகுல் அதிரடி, ஷாருக்கான் ஃபினிஷிங் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி.

Must Read

PBKS VS KKR – கே எல் ராகுல் அதிரடி, ஷாருக்கான் ஃபினிஷிங் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே. எல் ராகுல் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிரீஸ் கைல் இல்லாத நிலையில், தமிழக வீரர் ஷாருக்கான் அணியில் சேர்க்கப்பட்டார்.

PBKS VS KKR
Pbks vs KKR | photo credit @vivo Ipl 2021

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் ஒரு சில மாற்றங்களை செய்து பேட்டிங்கை தொடங்கியது. முதலில் ஓபனிங் பேட்டிங்கில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர்  ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.

ஆனால் சுப்மான் கில் 7 பந்துகளில், 1 ஃபோர் உடன் 7 ரன்கள் அடித்திருந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் அஷ்ரதீப் சிங்கின் பவுலிங்கில் கிலின் போல்ட் ஆனார்.

தொடர்ந்து வெங்கடேஷ் ஐயருடன், ராகுல் திருபாதி சேர்ந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இவ்விருவரும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்த நிலையில் ராகுல் திரிபாதி, ரவின்பிஸ்நோயின் சுழர்பந்தில் 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தீபக் ஹூடாவிடம் கெட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆடி வந்த வெங்கடேஷ் 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ரவி பிஸ்னோய் பந்தில் அவுட் ஆகினார்,

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரண்ணில் ஆட்டம்மிழந்தாலும் மறு முனையில் நிதிஷ் ரானா வெறும் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில் அர்ஷாதீப் சிங் 3 விக்கெட்டும், ரவிபிஸ்னோய் 2 விக்கெட் மற்றும் முகமது சாமி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

See also  முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது.

166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடினார்கள்.

பார்ட்னர்ஷிப் 70 ரன்கள் இருந்த நிலையில், 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் வருன் சக்கரவர்த்தியின் சூழலில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கடைசிவரை போராடி அவுட் ஆகாமல் இருப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்  2 சிக்ஸர், 4 ஃபோர் உடன் 55 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றியின் பாதைக்கு அருகில் அழைத்துச் சென்ற அவர் வெங்கடேஷ் பந்தில் அவுட் ஆயினார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 6 பந்துகளில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 7 வ து பேட்ஸ்மானாக,

கே எல் ராகுலுடன் விளையாடி வந்த தமிழக வீரர் ஷாருக்கான் தனது அதிரடியால் ஒரு சிக்ஸர் அடித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றி பெற செய்தார்.

Match highlights – PBKS VS KKR

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -