Saturday, October 16, 2021

PBKS vs RR – வெற்றியை நோக்கி பஞ்சாப் கிங்க்ஸ் அணி

Must Read

PBKS vs RR – பஞ்சாப் கிங்க்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் :

இன்று நடந்த பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் IPLT20 2021 இரண்டாவது கட்டத்தில் ஆடியது.

PBKS vs RR - பஞ்சாப் கிங்க்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
Photo Courtesy : IPLT20

பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முறையே ஏழு மற்றும் ஆறாம் இடத்தில் உள்ளன.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். (RR vs kxip 2021)

முதலில் ஓபனிங் பேட்ஸ்மேன் லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இவ்விருவரும் ஆரம்பம் முதலே அடித்துக் ஆடத் தொடங்கினார்கள்.

லீவிஸ் 26 பந்துகளுக்கு 1 சிக்ஸர் மற்றும் 7 ஃபோர் விளாசி 36 ரன்களுக்கு அரசதீப் சிங்கின் பந்து வீச்சில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்பு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 5 பந்துகள் மட்டுமே விளையாடி 4 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்து அதிர்ச்சி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மேலும் தனது பங்கிற்கு 36 பந்துகளில், 2 சிக்ஸர் மற்றும் 6 ஃபோர் அடித்து 49 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹர்பிரீத் பிரார் பந்தில் ஆட்டமிழந்தார்.

லிவிங்ஸ்டன் மற்றும் லோம்ரோர் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர், ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் மள மளவென உயர்ந்தது.

லோம்ரார் 17 பந்துகளில் 43 ரன்களும், லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் 25 ரன்களும் குவித்தனர்.

ஆட்ட நேர முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது 186 ரன்கள் குவித்தது.

See also  India vs England • இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறல்

பஞ்சாப் அணியின் சார்பாக அர்ஷதீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் முகமது ஷமி 3 விக்கெட்டைகளையும் வீழ்த்தினார்கள்.

தொடர்ந்து ஆடிவரும் பஞ்சாப் கிங்க்ஸ் அணி 10.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்களுடன் விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடி வருகின்றனர்.

K L ராகுல் – 29 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 போர் உடன் 44 ரன்களுடனும், மயங்க் அகர்வால் – 38 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 7 போர் உடன் 62 ரன்களுடனும் அதிரடியாக ஆடிவருகின்றனர்.

Punjab kings vs Rajasthan royals
PBKS vs RR
PBKS vs RR
PBKS vs RR
- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -