Wednesday, December 1, 2021

PUBG மீண்டும் இந்தியாவில் தடை செய்யப்படுமா?

PUBG மீண்டும் இந்தியாவில் தடை செய்யப்படுமா? PUBG மொபைல் கேம் இந்தியாவில் தடைக்கு பிறகும் இளைஞர்கள் இந்த VPN மூலமாக விளையாடி வருகின்றனர்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடுவதற்கு இளைஞர்கள் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். VPNஐப் பயன்படுத்தி Location ஐ மறைத்து விளையாடி வருகின்றனர். மகாராஷ்டிராவில் இரண்டு இளைஞர்கள் இறந்ததை அடுத்து இந்த விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாக எழும்பியது.

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் தனது கைப்பேசியில் PUBG விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது

அவரது மரணத்திற்கான காரணம் மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் காவல்துறையை மேற்கோள்காட்டி PTI அறிக்கை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

தீபக் ரத்தோர் 11-ம் வகுப்பு படித்து வந்தவர், அவர் ஒரு மாற்றுத்திறனாளி, இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படியாக மங்களூருவின் உல்லால் நகரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் 12 வயது சிறுவன் காணாமல் போன சில மணி நேரங்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

இரவு ஆகியும் வீடு திரும்பாததால், சிறுவனின் பெற்றோர் சனிக்கிழமை அன்று புகார் அளித்துள்ளனர். காலை 7 மணியளவில் அவரது உடல் வாழை இலைகள் மற்றும் தேங்காய் துருவல்களால் மூடப்பட்டிருந்தது.

உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 வயது சிறுவன் ஆன்லைனில் பப்ஜி விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவனுடன் 6 ஆம் வகுப்பு மாணவன் PUBG விளையாது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

See also  மாமனிதன் இரண்டாவது பாடல் இன்று வெளியீடு

சீன செயலி உடன் பப்ஜீ இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகும், இளைஞர்கள் மொபைலில் இருந்து கண்மூடித்தனமாக இந்த கேம் விளையாடுகிறார்கள். மெய்நிகர் தனியார் நெட்வொர்க்கை (VPN) பயன்படுத்தி இருப்பிடத்தை மறைத்து விளையாடி வருகின்றனர்.

பிற நாட்டின் இருப்பிடத்தைக் காட்டி இந்த கொடிய விளையாட்டை எளிதாக விளையாடி வருகின்றனர்.

இது மிகவும் கவலையளிக்கிறது. இதுபோன்ற புகார்கள் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் வரை வந்து கொண்டிருக்கிறது.

இதுபோன்ற விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்க பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

இளைஞர்கள் பப்ஜிக்கு அடிமை – PUBG

இந்தியாவில், இளைஞர்கள் பப்ஜிக்கு அடிமையாகும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏராளமான குழந்தைகள், இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 2020 இல், பப்ஜி உட்பட 118 சீன பயன்பாடுகளை மத்திய அரசு தடை செய்தது. இப்போது இளைஞர்கள் பப்ஜி விளையாட vpn மூலமாக ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செயல்முறை ப்ராக்ஸி என்று அழைக்கப்படுகிறது. ப்ராக்ஸி செய்த பிறகு இளைஞர்கள் எளிதாக பப்ஜி விளையாடுகிறார்கள்.

ஏனெனில் இது பயனரைத் தெளிவாக அடையாளம் காண முடிவதில்லை. இப்போதெல்லாம் இளைஞர்கள் vpn பயன்படுத்தி பப்ஜி விளையாடுகிறார்கள்.

இந்த கேம் மாதிரியே இளைஞர்களிடையே அடிமையாதலுக்கான கேம்கள் உள்ளன. அவை  Battle Ground Mobile, Free Fire, Call of Duty போன்றவையும் இளைஞர்களை இப்படித்தான் அடிமையாக்கி வருகின்றன. இவற்றிலும் இளைஞர்களுக்கு பப்ஜி போன்றே விளையாடி வருகின்றனர்.

சைபர் பாதுகாப்பு நிபுணர் ஆலோசனை

பெற்றோர்கள் குழந்தைகளையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும், பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் பிள்ளைகளை வளர்க்கவும் கவனம் தேவை.

See also  Children's day Why do we celebrate children's day? குழந்தைகள் தினம் ஏன் கொண்டாடுகிறோம்?

உங்கள் குழந்தைகள் PUBG போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்தால், உடனே அவர்களை உளவியல் ஆலோசனையைப் பெற வைக்க வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -