Monday, January 24, 2022
Homeஇந்தியாபப்ஜி மொபைல் இந்தியாவில் விரைவில் வரவிருக்கிறது ! Pubg mobile india release date

பப்ஜி மொபைல் இந்தியாவில் விரைவில் வரவிருக்கிறது ! Pubg mobile india release date

-

பப்ஜீ மொபைல் இந்தியா விளையாடும், ஸ்பார்ட்ன்களுக்கு ஒரு நற்செய்தி ! Pubg mobile India release date !

ரசிகர் பட்டாளம்

பப்ஜீ மொபைலுக்கு இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளிலிருந்தும் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு கேம் ஆகும். இதற்கு அதிகதிமாக ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 வருடங்களுக்கு முன் இந்த செயலியை இந்தியா அரசாங்கம் தடைசெய்திருந்தது. உடனடியாக அந்நிறுவனம் பப்ஜி மொபைல் இந்திய என்ற செயலியை விரைந்து தொடங்கப்படுவதாக அறிவித்திருந்து.

அந்நிலையில் இன்று அதன் அப்டேட் சமூக வலை தளங்களில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது (Pubg mobile india release date ).

Pubg mobile india release date

காத்திருப்பு

ஆம் நாம் ஆவலோடு நீண்ட நாட்களாக காத்திருந்த பப்ஜி மொபைல் இந்தியா சீக்கிரம் வருகிறது என்பதுதான் அந்த நற்செய்தி. பப்ஜி மொபைல் இந்தியா என்ற அந்நிறுவன டிவிட்டர் பக்கத்தில் ஃபாட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா.காம் (battlegroundmobileindia.com) என்ற ஒரு வெப்ஃசைட் தொடங்கியிருப்பதாகவும், ஃபாட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா என்ற யூடியுப் பக்கத்தை பகிர்ந்துள்ளனர்.

இந்தியாவில் பப்ஜி

பப்ஜி மொபைல் இந்தியாவில் தடைசெய்யப்பட்டதிலிருந்து ஏராளமான வதந்திகள் வந்தவண்ணமிருந்தது, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் அதன் டீஸர், வலைப்பக்கம், மற்றும் டிவிட்டர் கணக்கு தொடங்கியிருப்பது கேம் விளையாடுபவர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

நேற்று முதல் (#battlegroundindia) என்பவை டிவிட்டரில் டிரன்ங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Pubg mobile india release date

சந்தையில் ஒரு மாற்றம்

இந்திய தொழில்நுட்ப சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பப்ஜி கேம் நீண்ட நாட்களுக்கு பிறகு புதுப்பெலிவுடன் பப்ஜி மொபைல் இந்தியா என்று புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செயலியை இந்தியாவில் மீண்டும் தொடங்குவது அதன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

See also  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மாற்றம்

பப்ஜி கார்ப்பரேஷன் மற்றும் கிராப்டன் நிறுவனம் பப்ஜியை இந்தியாவில் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஏனென்றால் பப்ஜி ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது.

இந்த செயலியை இந்தியாவில் மீண்டும் கொண்டுவருவதற்கு இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுகொண்டு வருகிறது.

இந்தியாவில் முதலீடு

இந்நிலையில் பப்ஜி கார்ப்ரேஷன் வீடியோ கேம், பொழுதுபோக்கு, தகவல் தொழில்நுட்பத்தை மேலும் வளுப்படுத்துவதற்காக இந்தியாவில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதற்கான திட்டங்களையும் அந்நிறுவனம் அறிவித்தது.

புதிய அறிவிப்பு – Pubg mobile india release

பப்ஜி மொபைல் இந்தியா என்ற செயலியின் வெளியீட்டு தேதியை பப்ஜி கார்ப்ரேஷன் மற்றும் அதன் டெவலப்பர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கைவில்லை யென்றாலும். தொடங்கப்பட்டுள்ள பேஸ்ஃபுக், டிவிட்டர் மற்றும் யூடியுப் கணக்குகள் புதிதாக தொடங்கியிருப்பது கேமர்ஸ்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

Pubg mobile india release date

பரவலாக கேம் விளையாடுபவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஒரு பயத்தையும் இந்த புதிய அப்டேட் கொண்டு வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று நம் முன்னோர்களின் கூற்றுப்படி எந்த விஷயத்தை எடுத்தாலும் அளவோடு செய்வோமானால் அது நமக்கும் நல்லது, நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது என்பதை புரிந்துகொண்டு நம்முடைய ஃஸ்டெர்ஸை (Stress) விடுவிக்க ஒருசில சமயங்களில் மட்டும் விளையாடி நமது பொழுதுபோக்கை கழிக்கவேண்டுமென்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கவலையாயிருக்கிறது.

இன்னும் ஒரீரு மாதங்களில் பப்ஜி தொடங்குவது எப்போது என்று அந்நிறுவனம் விரைவில் அறிவிக்க இருக்கிறது.

https://www.youtube.com/channel/UCe31NPEeRGO0hcznx6Tdb-g?app=desktop

See also  ஐ.பி.எல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு:

https://minitbytz.com/category/world/

Related articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50FansLike
25FollowersFollow
6FollowersFollow
50SubscribersSubscribe

Latest posts