Wednesday, December 1, 2021

Rajinikanth Sick – ரஜினிகாந்த் உடல் நிலை குறித்த முழு தகவல்

Rajinikanth Sick – ரஜினிகாந்த் உடல் நிலை குறித்த முழு தகவல் : நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை எப்படி இருக்கின்றது முழு விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனியார் மருதுவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நிலை தொடர்பாக மருத்துவக் குழுவின் அறிக்கையை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

ரஜினிகாந்த் உறவினரும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் மேலும் அவர் மருத்துவர்களிடம் விசாரித்ததில் அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

அவர் ஏற்கெனவே கடந்த 2011 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறுப்பிடத்தக்கது.

ஆகவே அவருடைய நலத்தை அவ்வபோது கண்காணித்து வந்த ரஜினிகாந்த், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது.

இதன்பிறகு, மத்திய அரசின் அனுமதியோடு அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதகவலும் வெளியானது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியலுக்கு வருவதாகக் கூறி வந்தார் ரஜினிகாந்த்.

ஐதராபாத் அப்போலாவில் அனுமதி

ஐதராபாத்தில் அண்ணாத்த திரைபடத்தில் ஈடுபட்டிருக்கும் போது ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடாமல் ஒதிங்கிவிட்டார்.

See also  அல்லு அர்ஜூனுக்கு கொரானாவா? (Allu Arjun tests positive for Covid-19)

கடந்த சில நாட்களுக்கு முன் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற ரஜினிகாந்த், மிகுந்த உர்ச்சாகத்தில் இருந்தார்.

நேற்று முன்தினம், ரஜினி தனது பேரகுழந்தைகளுடன் அண்ணாத்த திரைப்படத்தை கண்டுமகிழ்ந்தார், தனது மகள் செளந்தர்யாவின் ஹீட் செயலியில் பகிந்த ரஜினி, நான், என் மகள்கள், மருமகன், விஷால், மனைவி, சம்பந்தி மற்றும் பேரன்களுடன் அண்ணாத்த படத்தை பார்த்தோம்.

குறிப்பாக என் பேரன் முதன் முறையாக படம் பார்த்தன். படம் பார்த்து முடிந்தவுடன் எனது பேரன் என்னை விடவே இல்லை. கட்டிப்பிடித்து தாத்தா தாத்தா படம் வெரி நைஸ் என்றான்.

கலாநிதி மாறன் காத்திருப்பு

நாங்கள் படம் முடிந்து வெளியே வந்த பிறகு கலாநிதி மாறன் திரையரங்கிற்கு வெளியே காத்திருந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, மேலும் சுமார் 10 மணிக்கு மேல் இருக்கும் ..

அப்போது என்ன சார் இங்க என கேட்டேன், இல்லை உங்களை பார்க்கணும் என்றார். பிசியான ஆளாக இருப்பவர்,

ஆனால் என்னை பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியில் காத்திருந்தார், என்னவென்றாலும் மேன்மக்கள் மென் மக்களே என ஹூட்டி ஆப்பில் பதிவிட்டிருந்தார்.

லதா ரஜினிகாந்த் விளக்கம் – Rajinikanth Sick

இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த்.

இது வழக்கமான பரிசோதனைதான் அவரது உடல்நிலை குறித்து கவலைப்பட ஏதுமில்லை. அவர் நலமாக இருக்கிறார் என்றார்.

See also  Kayal Anandhi - நடிகை கயல் ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறாரா?

மேலும், மருத்துவமனையில் ஒருநாள் தங்கிருந்து விட்டு பரிசோதனை முடிந்தபிறகு ரஜினி வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தார்.

இதன்பின்னர் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த அவரது உறவினர் ஒய்.ஜி.மகேந்திரன், ரஜினி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

நான் நேரில் பார்த்தபோது தூங்கிக்கொண்டிருந்தார் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றார்.

அதே நேரம் ரஜினியின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகள் எதுவும் வெளிவராததால் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் ராகவேந்திர மண்டபத்தில் உள்ள நிவாகிகளைத் தொடர்பு கொண்டு ரசிகர்கள் விசாரித்த வண்ணம் இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவுட்டுள்ள ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் நடிகர் ரஜினிகாந்த் முழு உடல்நலத்துடன் உள்ளார்.வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்

ஏகெனவே, சிறுநீரக மற்றும் அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினியின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடு தொடர்பான பரிசோதனைகளும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Editor : Thamizh

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -