Saturday, October 16, 2021

Rajiv Gandhi : முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 77 வது பிறந்தநாள்

Must Read

Rajiv Gandhi : முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 77 வது பிறந்தநாள் இன்று அனுசிக்கப்படுகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தந்தையை அவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உடனிருந்தனர்.

பிரதமர் மோடி

பின்பு பாரத பிரதமர் மோடியும் அஞ்சலி செலுத்தினார் அவருடன் ஆஷிஷ் குமார் உடனிருந்தார்.

Rajiv Gandhi birthday
Rajiv Gandhi

ஆகஸ்ட் 20 ஆன இன்று ‘பாரத ரத்னா’ ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் காங்கிரஸ் மற்றும் நாடு முழுவதும் மக்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

இன்று முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தியின் 77 வது பிறந்தநாள். இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு வீர் பூமிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

கண்காட்சி மற்றும் நலத்திட்டங்கள்

இந்த நிலையில், மறைந்த முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெல்லியில் இன்று சிறப்பு புகைப்பட கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, இரத்த தான முகாம்கள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பிரதமர் மோடி ட்வீட் செய்து அஞ்சலி செலுத்தினார்.

இன்று காலை வீர் பூமியை சென்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மற்றும் மறைந்த தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

See also  Incident of Ganjbasoda - மத்திய பிரதேச மாநிலத்தில் கோர விபத்து - ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலி

இளைஞர் காங்கிரஸ் – Rajiv Gandhi

இந்த சந்தர்ப்பத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உட்பட பல காங்கிரஸ் தலைவர்களும் அவருடன் வந்திருந்தனர். இளைஞர் காங்கிரஸ் சார்பாக பல நிகழ்ச்சிகளை இன்று ஏற்பாடு செய்யப்படுகின்றன.

நாடு முழுவதும் உள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ‘சத்பவ்னா திவாஸ்’ அன்று அஞ்சலி செலுத்துவார்கள்.

இதன் போது, மாநில, மாவட்டம், சட்டமன்றத் தொகுதி மற்றும் தொகுதி அளவில் புகைப்பட கண்காட்சி, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள், ‘ரன் ஃபார் நேஷன்’, ரத்த தான முகாம் போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -