Wednesday, December 1, 2021

Ranveer Deepika team in IPL – ரன்வீர் தீபிகாவின் புதிய அணி

Ranveer Deepika team in IPL – ரன்வீர் தீபிகாவின் புதிய அணி:

ரன்வீர்-தீபிகா கிரிக்கெட்டில் கால் பதிக்க தயாராக உள்ளனர்: ( IPL ) 2 புதிய ஐபிஎல் அணியை வாங்க கடும் போட்டி நிலவி வருகிறது.  ஐபிஎல்லில் ரன்வீர் தீபிகா அணி.

ஐபிஎல் 2022 இல், அதாவது 15 வது சீசனில் இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று BCCI ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதன் மூலம் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் ஏற்கனேவே இருந்த 8 அணிகளுடன் சேர்ந்து மேலும் 2 அணிகள்  இனைய உள்ளது, இதனால் ஐபிஎல்லில் விளையாடும் அணிகளின் எண்னிக்கை 10 ஆக உயரும்.

சமீபத்தில் ஐபிஎல்லின் 14வது சீசன் நிறைவடைந்தது. இதனால் இறுதிப் போட்டி முடிந்து இரண்டு வாரங்களுக்குள், ஐபிஎல் 15 வது சீசனுக்கான ஏற்பாடுகள் மிக வேகமாக தொடங்கியுள்ளன.

புதிய அணிகள்

ஐபிஎல் 2022 இல் இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் அணிகளின் எண்ணிக்கை 8ல் இருந்து 10 ஆக உயரும்.

இந்த அணிகள் யார் வாங்க போகிறார்கள் மற்றும் யார் யார் விளையாட்டுப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறிவருகிறது.

ஐபிஎல்லில் புதிய அணிகளுக்கான டெண்டர் காலத்தை பிசிசிஐ இந்த மாதம் அக்டோபர் 20 வரை நீட்டித்தது.

அதன்படி இரண்டு புதிய உரிமையாளர்களின் விலை தலா ரூ.3,500 கோடிக்கு குறையாது. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகளைச் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

அகமதாபாத், லக்னோ மற்றும் புனே ஆகியவை முன்னணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பிசிசிஐ ரூ .7,000 கோடி சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகம். இந்த இரண்டு அணிகளின் அடிப்படை மதிப்பு ரூ. 2,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

See also  Jofra Archer rulled out Test series - ஜோப்ரா ஆர்ச்சர் நியுசிலாந்துக்கெதிரான தொடரிலிருந்து விலகல்

சில ஊடக அறிக்கைகளின்படி, மான்சஸ்டர் யுனைடெட், அதானி மற்றும் பிர்லா போன்ற பெரிய தொழிலதிபர்கள் புதிய அணிகளை ஏலம் எடுக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

மேலும் கோடக் குரூப், அரவிந்தோ பார்மா, டோரண்ட் பார்மா, ஆர்.பி.-சஞ்சீவ் கோயங்கா குழு ஆகியோரும் இந்த போட்டியில் இருக்கிறார்கள்.

நட்சத்திர ஜோடிகள் – Ranveer Deepika

இந்தி திரைப்பட நட்சத்திர ஜோடிகளான  தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ( Ranveer Deepika) ஆகியோரும் ஐபிஎல்லில் ஒரு அணியை வாங்க விரும்புவதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.

இந்த செய்தி வெளியானவுடன், சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. சிலர் அதற்கு வேடிக்கையான எதிராகவும் பேசி வருகின்றனர்.

ஐபில் அணியை பாலிவுட் நட்சத்திரங்கள் வாங்குவது புதிதல்ல ஏற்கனவே, பாலிவுட் பாதுஷா ஷாருக் கான், ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் இருக்கின்றனர்.

BCCI ஒரு அணியை ஏலம் எடுக்க மூன்று நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி துபாயில் ஐபில் லில் விளையாடும் புதிய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -