Monday, January 24, 2022
Homeதமிழ் சினிமாசினிமாRIP Anandakannan - விஜே ஆனந்த கண்ணன் மறைந்தார். திரைப்பிரபலங்கள் இரங்கல்

RIP Anandakannan – விஜே ஆனந்த கண்ணன் மறைந்தார். திரைப்பிரபலங்கள் இரங்கல்

-

RIP Anandakannan – விஜே ஆனந்த கண்ணன் மறைந்தார். திரைப்பிரபலங்கள் இரங்கல்

1990 களில் மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் மிகப் பிரபலமான விஜே-ஆனந்த கண்ணன்(RIP Anandakannan) பித்த நாள புற்றுநோய் காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருக்கு 48 வயது.

சன்டிவி, சன் music ஆகிய சேனல்களின் மூலம் விஜே வாக பிரபலம் அடைந்தவர்.

RIP Anandakannan - விஜே ஆனந்த கண்ணன் மறைந்தார். திரைப்பிரபலங்கள் இரங்கல்
RIP Anandakannan

அவருடன் சரோஜா படத்தில் பணிபுரிந்த திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு, அவரது மரணம் குறித்த செய்தியை ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். அவர் நடிகரின் படத்தை பகிர்ந்து, “ஒரு சிறந்த நண்பர், ஒரு சிறந்த மனிதர் இனி இல்லை! #RIPanandakannan என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்திருந்தார்.

நடிகையும், அரசியலில் இருக்கும் காயத்ரி ரகுராம் ட்வீட் செய்து, “ஆனந்தகண்ணனைப் பற்றி கேட்க மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இனிமையான நபர். மிக விரைவில் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆறுதல். அவர் எப்போதும் சிரித்துக்கொண்டே மற்றவர்களை சிரிக்க வைத்தார். என்று தெரிவித்திருந்தார்.

நடிகை ஆரத்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் அதில் டார்லிங் சகோதரர் மிகவும் சீக்கிரத்தில் ஏமாற்றமடைந்து நம்மை விட்டு பிரிந்துவிட்டார். கடவுள் அவரது குடும்பத்திற்கு வலிமையும், அவருக்கு ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்களும் அவரது நினைவாக புகைப்படத்தினை வெளியீட்டு தங்களுது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்ல திரை நட்சத்திரங்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

See also  Netrikann - நயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடியில் வெளியானது

Related articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

50FansLike
25FollowersFollow
6FollowersFollow
50SubscribersSubscribe

Latest posts