Wednesday, December 1, 2021

Thalapathy 66 – பற்றிய தகவலை டைரக்டர் சீக்ரெட் அப்டேட்

Thalapathy 66 – தளபதி 66 பற்றிய தகவலை டைரக்டர் வெளிட்ட சீக்ரெட் அப்டேட்

தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படமான தளபதி 66 படத்தை தெலுங்கு முன்னணி டைரக்டரான வம்சி இயக்க போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது இந்த படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்  தில்   ராஜு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தயரிக்க உள்ளார். 

இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், விஜய்யின் மகளாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே போல் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. 

ரசிகர்கள் தளபதி 66 பற்றிய அறிவுப்பு வெளியிட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அனால் இதுவரை எந்த ஒரு தகவளோ அல்லது அதிகாரபூர்வ அப்டேட்டோ,

படத்தின் ஷுட்டிங்கை எப்போது துவக்க போகிறார்கள் என்ற தகவலையோ வெளியிடவில்லை இதனால் ரசிகர்கள் தளபதி 66 அப்டேட் கேட்க துவங்கி விட்டனர். 

தான் இயக்க இருக்கிற தளபதி  66 படத்தின் துவக்க வேலைகளை ஏற்கனவே துவங்கி விட்டதாக டைரக்டர் வம்சி கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா இணைந்து நடித்த தோழா படத்திற்கு பிறகு தமிழில் டைரக்டர் வம்சி இயக்க போகும் படம் என்பதால் படத்தின் டைட்டில் என்ன வைக்கலாம் என தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம். 

புதிய தகவல் – Thalapathy 66

இந்த நிலையில் டைரக்டரிடமிருந்து வந்த தகவல் தளபதி 66 பற்றி எதிர்பார்ப்பு அங்கரித்து வருவதால் ரசிகர்களுக்காக மிக பெரிய அப்டேட் டைரக்டர் வம்சியே  வெளிட்டுள்ளார்.

அது பற்றி வம்சி கூறுகையில்  எனது மிக பெரிய பலமே உறவுகள் மற்றும் உணர்வுகளை அதிகம் காட்டுவது தான் இந்த இரண்டு அம்சங்களையும் விஜய் சாரின் மாஸ் மற்றும் ரசிகர்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது ஆகியவற்றை மனதில் வைத்துதான் இந்த கதையை நான் உருவாக்கி உள்ளேன் என்றார்.

படக்குழு பற்றி கேட்பதற்கு, நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அப்டேட்களும் டிசம்பர் மாதம் முதல் வரும் கதையை பைனல் செய்து வருகிறோம்.

அதனால் இந்த ஆண்டு இறுதி முதல் அதிகமான அப்டேட்களை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றார் விஜய்யின் எளிமையை பாராட்டிய வம்சி இந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்தார் 

தளபதி விஜய் தொடர்ந்து அவர் பேசுகையில்,  தமிழ் சினிமாவில் அவர் மிகப் பெரிய உயரத்தை எட்டி பிடித்து விட்டு இருந்தாலும். ஆனால் இப்பொழுதும்  அவர் மிகஎளிமையாக தன்மையாக இருக்கிறார்.

அதனாலே அவருடன் பணியாற்றுவது எனக்கு மிக கம்ப்ர்டபிளாக  இருக்கும் என நினைக்கிறன் என்றார். 

Thalapathy 66

தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் இதுவும் பேன் இந்தியன் படம் தான் பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷீட்டிங்கை முடித்த பிறகு தளபதி 66 (Thalapathy 66) ஷீட்டிங்கை தளபதி விஜய் துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Editor : Thamizh

See also  Nadhiya - நடிகை நதியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

- Advertisement -