Saturday, October 16, 2021

Whatsapp – வாட்ஸ்அப்பில் உங்களை Block செய்தது யார்?

Must Read

Whatsapp – வாட்ஸ்அப்பில் உங்களை Block செய்தது யார்?

Whatsapp - வாட்ஸ்அப்பில் உங்களை Block செய்தது யார்?

கீழ்காணும் 4 எளிய வழி முறைகளில் நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

IOS க்கான Chat பயன்பாட்டு சேவையாக நவம்பர் 2009 இல் வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

அதன் பிறகு ஆகஸ்ட் 2010 இல், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான செயலியை வெளியிட்டது. படிப்படியாக 4 ஆண்டுகளில் 200 மில்லியன் பயன்பாட்டாளர்கள் என்ற என்னைகையோடு புதிய மைல்கல்லை எட்டியது.

2021 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் இந்தியாவில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது சுமார் 390.1 மில்லியன் பயன்பாட்டாளர்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

அதன்படி அடுத்து இரண்டு இடங்களில் பிரேசில் 108.4 மில்லியன் பயன்பாட்டாளர்கள், அமெரிக்காவில் 75.1 மில்லியன் பயன்பாட்டாளர்கள் இந்த செயலியை உபயோகப்படுத்துகிறார்கள்.

நாம் அறிந்திருந்த படி செய்திகள் பரிமாறிக் கொள்ளுதல், ஆடியோ மற்றும் வீடியோ மற்றும் வீடியோ அழைப்பு போன்றவைகளை நாம் பரிமாறிக் கொள்ளுவது இதன் சிறப்பு.

வாட்ஸ்அப்பில் யாராவது உங்களைத் தடுத்திருந்தால், இந்த 4 வழிகளில் நீங்கள் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு செய்தி அனுப்புகிறீர்கள், ஆனால் அவரை அடையவில்லை அல்லது அழைப்பு செயல்படவில்லை என்றால், அவர் உங்களைத் தடுத்திருக்கலாம் அதாவது block செய்திருக்கலாம். என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் தடுக்கப்பட்டுள்ளீர்களா ? இல்லையா ? என்பதை நீங்கள் வாட்ஸ்அப் மூலம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் நான்கு வழிகளில் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். அதாவது யாராவது உங்களைத் தடுத்திருக்கிறார்களா? என்று சோதிக்க வாட்ஸ்அப் சில குறிகாட்டிகளை அமைத்துள்ளது.

1. கடைசியாக பார்த்த / ஆன்லைன் நிலை : Last Seen or Online Status :

மிகவும் ஈசியாக சோதிக்க Chat ல் கடைசியாக அவர்கள் பார்த்த செய்தியின் நேரம் அல்லது ஆன்லைன் நிலையைத் தெரிந்து கொள்வதன் மூலம் அறியலாம் .  அவர் உங்களை பிளாக்  செய்த பிறகு, அந்த நபர் கடைசியாகப் பார்த்த நேரம் அல்லது தேதி , ஆன்லைன் நிலை மற்றும டிஸ்பிலே picture ரை மாற்றிய பற்றிய தரவுகளை பார்த்து அறிந்து கொள்ளலாம், அனால் பயனாளர்கள் அவர்களது கடைசியாக பார்த்த நேரம் தேதியை மறைக்க இந்த செயலி வழிவகை செய்திருக்கிறது, அப்படியானால் இரண்டாவது வழியைப் பின்பற்றலாம்.

See also  Hosting meaning in tamil - ஹோஸ்டிங் என்றால் என்ன?

2. செய்தியினை படித்த பிறகு காட்டும் நீல நிற டிக் ( Blue tick on messaging ):

ஒரு செய்தியை அனுப்பிய பிறகு ரிசீவர் பார்த்த பிறகு நீல நிற டிக் தோன்றும் என்பது பெரும்பாலும் நாம் அறிந்ததே. இரட்டை டிக் தெரிந்தால் செய்தி வந்துவிட்டது சென்று விட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள், ஆனால் பயனர் அதைப் படிக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் ஒரு டிக் மட்டுமே வந்தால், அந்த நபர் உங்களைத் பிளாக் செய்திருக்க கூடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள

3. குரல் மற்றும் வீடியோ அழைப்புகளில் அடிக்கடி தோல்வி (Failure )

செய்திகளைத் தவிர, பெரும்பாலான நாம் குரல்பதிவு மற்றும் வீடியோ அழைப்புகள் வாட்ஸ்அப்பில் செய்வது வழக்கம். அழைத்த பிறகு, ரிங்கிங் எழுதப்பட்டிருந்தால், அழைப்பு நபரை சென்று அடைந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆனால் உங்களின் அழைப்பின் போது ரிஸீவர் இன்டர்நெட் அப்போது உபயோகத்தில் இல்லை அல்லது ஆப் செய்திருந்தால் connect என்று வரும், அதேபோல் ரிஸீவர் உங்களைத் தடுத்திருந்தால், அழைப்பு மீண்டும் மீண்டும் தோல்வியடையும். ஆனால் ஒரு சில நேரங்களில் இன்டர்நெட் சிக்கல் காரணமாக அழைப்பு சென்றடையவில்லை என்றால் எனவே நான்காவது வழிகளிலிருந்து  நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

4. வாட்ஸ்அப்பில் குழுவை உருவாக்கவும் (Whatsapp Group )

ஒரு குழுவை உருவாக்குவதன் மூலம், மற்றவர் உங்களைத் தடுத்தாரா இல்லையா என்பதை நீங்கள் எளிதாக அறிந்து கொள்வீர்கள். அதற்க்கு முதலில் நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். உங்களைத் தடுத்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் நபரை அந்த குழுவில் சேர்க்க வேண்டும். நீங்கள் சேர்த்த பிறகு, ‘குழுவில் இந்த தொடர்பைச் சேர்க்க முடியவில்லை’ (Couldn’t Add This Contact On Group’) என்ற செய்தி தோன்றினால், அவர் உங்களைத் தடுத்துள்ளார் என்பதனை நீங்கள் எளிதல் கண்டுகொள்ளலாம்.

See also  Digital marketing internship - டிஜிட்டல் மார்க்கெட்டிங் இன்டர்ன்ஷிப்

வாட்சப் பயனர்களின் எண்னிக்கை கீழே:

நாடுபயனர்களின் எண்ணிக்கை 
இந்தியா390.1 million
பிரேசில்108.4 million
அமெரிக்கா75.1 million
இந்தோனேசியா68.8 million
ரஷ்யா64.7 million
மெக்சிகோ62.3 million
ஜெர்மனி48.3 million
இத்தாலி35.5 million
ஸ்பெயின்33.0 million
யுகே30.1 million
Source: Business Insider

Whatsapp web : நீங்கள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் வாட்சப்பை உபயோகப்படுத்த கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whatsapp in Computer

  1. மேலேயுள்ள லிங்கை கிளிக் செய்த பிறகு உங்களுக்கு QR CODE தெரியும்
How to Use WhatsApp Web for PC
  • 2. அதன் பிறகு உங்கள் மொபைலில் வலது புறம் உள்ள மூன்று கோட்டை அழுத்துங்கள்
Whatsapp - வாட்ஸ்அப்பில் உங்களை Block செய்தது யார்?

3. பின் அதில் WhatsApp Web என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள், அதன் பின் Scan Code என்ற ஆப்ஷன் தோன்ற. பிறகு கம்ப்யூட்டரில் காணப்படும் QR CODE யை மொபைல் வழியாக ஸ்கேன் செயுங்கள். உங்களுடைய வாட்சப் கணக்கு கம்ப்யூட்டரில் தோன்றும்.

Whatsapp - வாட்ஸ்அப்பில் உங்களை Block செய்தது யார்?

Funny dp for whatsapp or Motivational dp for whatsapp

- Advertisement -

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

World Food Day 2021 – History, theme and significance

World Food Day 2021 - History, theme and significance: நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது. இங்கே ஒருவர் சாப்பிடாமல் பசியால் இறக்கிறார்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -